கரூர் அருகே வங்கி அதிகாரி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
கரூர் அருகே வங்கி அதிகாரி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,
கரூர் மண்மங்கலம் அருகே மரவாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேன்(வயது 24). இவர், நாமக்கல்லில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு திடீரென எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தான் எழுதி வைத்த கடிதத்தை வெளியிட்டு நிருபர்களிடம் சுரேன் கூறுகையில், நான் வேடிச்சிபாளையம் என்கிற ஊரில் நடந்த திருவிழாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த வாங்கல் போலீசார் சில காரணங்களை கூறி என் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் ஊரில் என் மரியாதை போய்விட்டதால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றேன். எனவே இதற்கு போலீஸ் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
எனினும் இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசாரிடம் விசாரித்த போது, கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்டதால் தான் சுரேன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. வாங்கல் போலீசார் மீது அவர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் எவ்வித முகாந்திரமும் இல்லாதவை என கூறினர். கரூரில் வங்கி அதிகாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story