புதுச்சேரி மாநிலத்தில் 12 மையங்களில் நீட் தேர்வு நடந்தது: தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
புதுச்சேரியில் 12 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடந்தது. தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்தவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
புதுச்சேரி,
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதற்காக புதுச்சேரியில் 12 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேங்காய்த்திட்டு ஆச்சார்யா பால சிக்ஷாமந்திர், வில்லியனூர் ஆச்சார்யா பால சிக்ஷா மந்திர், பொறையூர் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி, உழவர்கரை பில்லாபாங் இன்டர்நேசனல் பள்ளி, காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா, கேந்திர வித்யாலயா, வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரி, பேட்ரிக் பள்ளி, மூலக்குளம் ஸ்டேன்ஷ்போர்டு இன்டர்நேசனல் பள்ளி, காலாப்பட்டு ஸ்டடி பள்ளி, முத்தியால்பேட்டை வாசவி பள்ளி, தட்டாஞ்சாவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த மையங்களில் 8 ஆயிரத்து 894 மாணவ, மாணவிகள் தேர்வுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கான தேர்வு மையங்களாவும் இவை இருந்தன. குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருந்தனர். அவர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் தேர்வில் கலந்துகொண்டனர்.
தேர்வு மையங்களுக்கு காலை 7 மணிக்கு முன்னதாகவே மாணவ, மாணவிகள் வர தொடங்கினர். அவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மாணவிகள் காலில் அணிந்திருந்த கொலுசுகள், காதில் அணிந்திருந்த கம்மல்கள் கூட அகற்றப்பட்டன. கடந்த ஆண்டே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த அறிவுரைகளை பின்பற்றியபடியே வந்திருந்தனர்.
தேர்வு கூடங்களுக்குள் காலை 9.30 மணிவரை மட்டுமே மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் வந்த மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. சாரதா கங்காதரன் கல்லூரியில் 9-30 மணிக்கு பிறகு வந்த விழுப்புரத்தை சேர்ந்த செல்ஷியா என்ற மாணவியை தேர்வுக்கூடத்துக்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து வேதனையுடன் அவர் அங்கிருந்து சென்றார்.

Related Tags :
Next Story