மாற்றுத்திறனாளி தந்தை இறந்ததற்கான நிவாரணம் கேட்டு கலெக்டருக்கு கடிதம் அனுப்பிய 6-ம் வகுப்பு மாணவி
மாற்றுத்திறனாளி தந்தை விபத்தில் இறந்ததற்கான நிவாரணம் கேட்டு 6-ம் வகுப்பு மாணவி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதைத்தொடர்ந்து உதவித்தொகையாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
திருவண்ணாமலை,
சேத்துப்பட்டு தாலுகா ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி எல்.கார்த்திகா. இவர் தனது கைப்பட மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தில் நான் ஆவணியாபுரத்தில் வசித்து வருகிறேன். மாற்றுத்திறனாளியான எனது தந்தை லோகநாதன் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதனால் நாங்கள் வறுமையில் உள்ளோம். என் தாய் கூலி வேலைக்கு சென்றுதான் எங்களை காப்பாற்றி வருகிறார். நான் மற்றும் எனது சகோதரன் சிரஞ்சீவி, சகோதரி நிறைமதி ஆகிய 3 பேரும் எங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறோம்.
எங்கள் பள்ளியில் செய்தித்தாள் படிக்கும்போது, நீங்கள் ஏழைகளின் வீட்டுக்கு நேரடியாக சென்று உதவிகள் செய்வதை படித்து உள்ளேன். என் தந்தை இறந்ததற்கான விபத்து நிவாரணம் கோரி மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எங்கள் ஊர் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராமநிர்வாக அலுவலர் வந்து எங்களையும், நாங்கள் வசிக்கும் வீட்டையும் பார்வையிட்டு என் தாயிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் என் தந்தை இறந்ததற்கான உரிய ஆவணங்களையும் அவர்கள் பெற்று சென்றனர். ஆனால் என் தந்தை இறந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் நிவாரணம் கிடைக்கவில்லை. உரிய நிவாரணம் கிடைக்க நீங்கள் வழிவகை செய்ய வேண்டும் என்று எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தை படித்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாணவி கார்த்திகா, கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு மாணவி கார்த்திகாவிடம் அவரது தந்தை சாலை விபத்தில் இறந்ததற்கான விபத்து நிவாரண உதவித்தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், அவரது தாயிடம் விதவை உதவித்தொகை மாதம் ரூ.1000 பெறுவதற்கான அனுமதி ஆணையும் கலெக்டர் வழங்கினார்.
மேலும் அரசு பள்ளியில் படித்து இந்த இளம் வயதிலேயே துணிச்சலாகவும், குடும்பத்திற்காகவும் கடிதம் அனுப்பிய மாணவி கார்த்திகாவை கலெக்டர் பாராட்டினார்.

Related Tags :
Next Story