ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தொழில் முனைவோர் ஆவது எப்படி? என்பது குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.
சென்னை,
தொழில் முனைவோர் ஆவது எப்படி? என்பது குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஈக்காட்டுத்தாங்கல், சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குனர் வெ.இறையன்பு (ஐ.ஏ.எஸ். அதிகாரி) தலைமை தாங்கினார். கூடுதல் இயக்குனர் சஜிவனா முன்னிலை வகித்தார். இதில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆட்டோ ஓட்டி கொண்டு இருக்கும் டிரைவர்கள் பலர் வந்திருந்தனர். அவர்கள் மத்தியில் வெ.இறையன்பு பேசியதாவது.
சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். இது ஒரு தொடக்கம் தான், நீங்கள் இன்னும் முன்னேற வேண்டும். நாணயம், நேர்மை இருந்தால் உங்கள் தொழிலில் முன்னேறலாம். அனைத்து தொழில்களிலும் மிகவும் டென்ஷனான தொழில் ‘ஆட்டோ டிரைவிங்’ தான்.
வாடிக்கையாளர்களை உங்கள் வசம் ஆகுவது என்பது, அவர்கள் உங்களுடன் பயணம் செய்யும்போது, நீங்கள் தரும் நம்பிக்கையில் தான் இருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ள கோபத்தை பயணிகளிடம் காட்டக்கூடாது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் முதலில் உங்கள் முகத்தை தான் பார்க்கிறார்கள். நம் நாட்டையும், மாநிலத்தையும் நீங்கள் தான் அவர்களுக்கு அறிமுகம் செய்கிறீர்கள்.
நீங்கள் நல்ல ஆட்டோ டிரைவர்களாக இருந்தால், வாடிக்கையாளர்கள் இருதயத்தில் இடம்பிடிப்பீர்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, பயணிகளிடம் அன்பாய் பேச வேண்டும், அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும், நியாயமாக இருக்க வேண்டும், தூய்மையாக இருக்க வேண்டும்.
வெறும் உழைப்பு மட்டும் இருந்தால் போதாது, அதில் கிடைக்கும் வருவாயை தனியாக சேமித்து வைக்க பழக வேண்டும். வேலையையும், குடும்பத்தையும் சரிசமமாக பார்த்து கொள்ள வேண்டும். நீங்கள் இதோடு நின்றுவிடக்கூடாது. நீங்கள் தொழில் முனைவோர் ஆக நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நீங்கள் தொழில் முனைவோர் ஆக நிறைய பயிற்சிகள் இங்கு வழங்குகிறோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இன்று நாட்டில் தொழில் முனைவோராக ஆகி இருப்பவர்கள் சாதாரணமாக இருந்தவர்கள் தான். ஆகவே உங்களுக்கு ஒரு தொலைநோக்கு பார்வை இருக்கவேண்டும். நீங்கள் தன்னம்பிக்கையோடு, பொறுப்புள்ளத்தோடு, பண்பாட்டு தூதுவர்களாக இருக்க வேண்டும்.
அதைத்தொடர்ந்து, கூடுதல் இயக்குனர் சஜிவனா பேசும்போது, ‘ஆட்டோ டிரைவர்கள் பெரிய தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு அரசு மூலம் லோன் வாங்குவதற்கான ஆலோசனையை நாங்கள் வழங்குவோம். அதற்கான வாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது. இது பலருக்கும் தெரிவதில்லை. உங்கள் தொழிலில் எப்படி முதலீடு செய்வது? சேமிப்பு செய்வது எப்படி? என்பதை நாங்கள் இங்கு சொல்லி கொடுக்கிறோம். அதுமட்டுமல்லாமல் தனிநபர் பாதுகாப்பு குறித்தும் விளக்கமாக எடுத்து கூறுகிறோம்’ என்றார்.

Related Tags :
Next Story