நீட் தேர்வை முழுமையாக தடை செய்ய வேண்டும்: எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தல்
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து, பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சோக்கை நடத்த வேண்டும் என்று முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிவகங்கை,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட 8-வது மாநாடு காரைக்குடியில் 2 நாட்கள் நடைபெற்றது. மாநாட்டையொட்டி புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்ட கவுரவ தலைவர் தேவரம்பூர் மாணிக்கம் கண்காட்சியை தொடங்கிவைத்தார். திருப்பத்தூர் ஆறுமுகம் சீதையம்மாள் கலைக்கல்லூரி துணை முதல்வர் கோபிநாத், பாரதி புத்தக அரங்கை திறந்துவைத்தார். மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஜீவசிந்தன், துணைத்தலைவர் குணசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தெய்வாணை ஆகியோர் தலைமைக்குழுவாக மாநாட்டை வழிநடத்தினர். கிளைச் செயலாளர் அழகர்சாமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். துணைச் செயலாளர் ஜனநேசன் பண்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். கலை இலக்கிய அறிக்கையை மாவட்ட பொருளாளர் செல்வக்குமார் சமர்பித்து பேசினார்.
பின்னர் கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட தலைவராக ஜீவானந்தம், செயலாளராக சங்கரசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளராக பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர்களாக செல்வ கதிரவன், ராஜேந்திரன், துணைச் செயலாளர்களாக தமிழ்கனல், அழகர்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீட் தேர்வை பயன்படுத்தி தமிழக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
பாரம்பரிய விளையாட்டு, கலைகளுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். நான்கு வழிச்சாலை அமைக்கும்போது அகற்றப்பட்ட மரங்களுக்கு இணையாக ஒரு மரத்தை அகற்றினால் 10 மரக்கன்று நட வேண்டும் என்கிற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தேசிய நெடுஞ்சாலைத்துறை செயல்படுத்த வேண்டும்.
காரைக்குடி பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடியில் கண்டறியப்பட்ட பழமையான பொருட்களை கொண்டு திருப்புவனத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story