திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 18 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூரைச் சேர்ந்தவர் நித்யானந்தன்(வயது 38). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 5-ந் தேதி நித்யானந்தன், வீட்டை பூட்டி விட்டு உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த தனது தந்தையை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
18 பவுன் திருட்டு
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்த புகாரின்பேரில் மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story