பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதால் கோவில் திருவிழாவை சித்திரை மாதத்திற்கு மாற்ற வேண்டும்
பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதால் கோவில் திருவிழாவை சித்திரை மாதத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஜாரிகொண்டலாம்பட்டி பகுதி பொதுமக்கள் அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமை தாங்கினார். சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்களுடன் பள்ளி சீருடை அணிந்து கொண்டு பல மாணவ, மாணவிகளும் வந்திருந்தனர்.
அவர்கள் தேர்வு காலத்து பண்டிகை, விடுப்பில் நடந்தால் சிறக்காதா?, கோடை விடுமுறை எங்களுக்கு கொண்டாட்டமாய் மாறாதா? என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி வந்தனர். இதையடுத்து பொதுமக்களில் சிலரை மட்டும் போலீசார் உள்ளே சென்று மனு கொடுக்க அனுமதித்தனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், ‘எங்கள் பகுதியில் மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடத்தப்படுகிறது. அந்த நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடைபெறுவதால் அவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. எனவே கோவில் திருவிழாவை மாணவர்களின் கோடை விடுமுறையான சித்திரை மாதத்திற்கு மாற்ற ஊர் பெரியவர்களுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்றனர்.
மேட்டூர் அருகே உள்ள சூ.மோட்டூரை சேர்ந்த பொதுமக்கள் பலர் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், ‘எங்கள் பகுதியில் உள்ள பட்டா நிலத்தின் வழியாக மயானத்திற்கு இறந்தவர்களின் உடல்களை எடுத்து சென்று வந்தோம். தற்போது பட்டா நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்த வழித்தடத்தை அடைத்துவிட்டனர்.
இதனால் மயானத்திற்கு உடல்களை எடுத்து செல்ல முடியவில்லை. இதுதவிர குடிநீர் எடுத்து வரமுடியவில்லை. அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அழைத்து செல்லமுடியவில்லை. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வழித்தடம் அமைத்து கொடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பொன்நகர் பகுதியை சேர்ந்த வெண்மதி என்ற பெண் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு ஒன்று கொடுத்தார். அதில், ‘நான் பிளஸ்-2 வரை படித்து உள்ளேன். மேற்படிப்பு படிக்க வசதி இல்லை. எனக்கு எந்த ஒரு ஆதரவும் இல்லாததால் வருமானம் இல்லாமல் நான் கஷ்டப்பட்டு வருகிறேன்.
சரியாக வாய் பேச முடியாத காரணத்தினால் யாரும் வேலை கொடுப்பதில்லை. எனவே கருணை அடிப்படையில் எனக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story