இடிந்த வீட்டில் சாமி சிலைகள் கண்டெடுப்பு பதுக்கி வைக்கப்பட்டதா? போலீஸ் விசாரணை
சூளகிரி அருகே இடிந்த வீட்டில் சாமிகள் இருந்தது கண்டெடுக்கப்பட்டது. அவை பதுக்கி வைக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கோனேரிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 55). இவர் சீதாராம் மேடு பிருந்தாவன் கார்டன் பகுதியில் தற்போது வசித்து வருகிறார். கோனேரிப்பள்ளியில் உள்ள இவரது வீடு தற்போது இடிந்து விட்டது. இந்த நிலையில் நேற்று ஒன்றரை அடி உயரம் கொண்ட ராமர் சிலை மற்றும் முக்கால் அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலைகள், இடிந்த வீட்டில் கிடந்தன.
இதை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதே போல தாசில்தார் மிருணாளினி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
சிலைகளை யாரேனும் கடத்தி வந்து, அந்த பகுதியில் பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த சிலைகளை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சூளகிரி தாசில்தார் மிருணாளினியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சிலைகளை போலீசார் ஒப்படைத்தவுடன் இது தொடர்பாக விசாரணை நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து சிலைகளை என்ன செய்வது என்று முடிவு செய்வோம். தற்போது மீட்கப்பட்ட சிலைகள் பஞ்சலோக சிலைகளாகவோ அல்லது பித்தளை சிலைகளாகவோ இருக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இடிந்த வீட்டில் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story