கூட்டுறவு சங்க தலைவர் பதவிக்காக மோதல்; ஒருவர் படுகாயம் ராணுவ வீரர் உள்பட 4 பேர் மீது வழக்கு
திருவட்டார் அருகே கூட்டுறவு சங்கத்தில் தலைவர் பதவிக்காக ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ராணுவ வீரர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவட்டார்,
குமரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல் நடந்தது. திருவட்டார் அருகே அருவிக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் தலைவர் டேவிட் (வயது52), அருவிக்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் ஜான் கிறிஸ்டோபர் (40) ஆகியோர் அடங்கிய அணியினர் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து வெற்றிபெற்ற அணியினர் தலைவர், துணைத்தலைவர்களை தேர்வு செய்வதற்காக சங்க அலுவலகத்தில் கூடினர். அப்போது, தலைவர் பதவிக்காக டேவிட், ஜான் கிறிஸ்டோபர் இடையே மோதல் ஏற்பட்டது. டேவிட் தனது ஆதரவாளர்களுடன் ஜான் கிறிஸ்டோபரை தாக்கியதாக தெரிகிறது.
இதில் படுகாயம் அடைந்த ஜான் கிறிஸ்டோபர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஜான் கிறிஸ்டோபர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் டேவிட், அவரது மகன் டெர்லின் (20), ராணுவ வீரர் ஜெஸ்டின் ராஜ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுபோல், டேவிட் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜான் கிறிஸ்டோபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story