குழந்தைகளுக்கான நோய்களை ஒழிப்பதில் கிராமங்களில் பணியாற்றும் டாக்டர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது
குழந்தைகளுக்கான நோய்களை ஒழிப்பதில் கிராமங்களில் பணியாற்றும் டாக்டர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு குழந்தைகள் நோய்கள் குறித்த பயிற்சி முகாம் நேற்று கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. இதன் தொடக்க விழாவுக்கு அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் சோமசேகர் தலைமை தாங்கினார். சமூக மருந்தியல் துறை பேராசிரியர் சுரேஷ்பாலன் வரவேற்று பேசினார். இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் குணசிங், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குழந்தைகள் இந்த சமூகத்தில் மிகப்பெரும் அங்கமாக திகழ்கிறார்கள். அவர்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சிறு, சிறு நோய்களுக்கு கூட டாக்டர்களாகிய நீங்கள் முக்கியத்துவம் அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அதை உங்கள் கடமையாக நினைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு பெற்றோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
குழந்தைகளின் ஊட்டச்சத்து விஷயத்தில் டாக்டர்களும், பெற்றோரும் இணைந்து கவனம் செலுத்த வேண்டும். கிராமப்பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரே நேரத்தில் பல குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நோய் தாக்கம் இருந்தால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிப்பதுடன், மாவட்ட நிர்வாகத்துக்கும் அதுதொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும். அப்போது தான் சம்பந்தப்பட்ட நோய் எப்படி உருவானது? என்ன காரணம்? என்பதை கண்டறிந்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள முடியும். எனவே குழந்தைகளுக்கான நோய்களை ஒழிப்பதில் கிராமப்புறங்களில் பணியாற்றும் டாக்டர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நானும் ஒரு குழந்தைக்கு தந்தை என்ற முறையில் குழந்தைகளுக்கான மருத்துவம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கும் தெரியும். எனவே இந்த பயிற்சி முகாம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசினார்.
பின்னர் நடந்த பயிற்சி முகாமில் குடல், இரைப்பை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் பாப்பி குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு குறித்தும், நெஞ்சகநோய் சிறப்பு மருத்துவர் முத்துக்குமார் குழந்தைகளுக்கான ஆஸ்துமா குறித்தும், குழந்தைகள் நல மருத்துவர் சுரேஷ் காய்ச்சல், அதனால் ஏற்படும் வலிப்பு நோய் குறித்தும், சமூக மருந்தியல் துறை பேராசிரியர் டாக்டர் சுரேஷ்பாலன் டெங்கு காய்ச்சல் தடுப்பு முறை குறித்தும் பேசினர். பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் ரமேஷ்குமார் மூச்சுத்திணறல் பாதிப்பு குறித்தும், தேசிய குழந்தைகள் ஊட்டச்சத்து மருத்துவ நிபுணர் எலிசபெத் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்தும், அரசு மருத்துவக்கல்லூரி டீன் சோமசேகர் வளர் இளம் பருவத்தினருக்கான புதிய தடுப்பூசிகள் குறித்தும் உரையாற்றினர்.

Related Tags :
Next Story