கருணை கொலைக்கு அனுமதி கோரி தாய்-மகன் மனு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தனர்
கருணை கொலைக்கு அனுமதி கோரி தாய்-மகன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
திருச்சி,
மணிகண்டம் பகுதியை சேர்ந்தவர் அகிலா(வயது 36). இவருடைய கணவர் பெருமாள் விபத்தில் இறந்து விட்டார். அகிலாவின் மகன் ஜெயசீலன்(13). அகிலா தனது மகனுடன் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனு குறித்து அகிலா கூறியதாவது:-
திருச்சி அரசு மருத்துவமனையில் எனக்கு (அகிலா) கர்ப்ப பை சிகிச்சையின் போது தவறுதலாக டாக்டர்கள் சிகிச்சை அளித்து விட்டனர். இதனால் எனது சிறுநீரக பை பாதிக்கப்பட்டு உடல் உபாதைக்கு ஆளாகி உள்ளேன். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகின்றேன். மாற்று அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில், அதனை செய்ய மருத்துவமனையில் டாக்டர்கள் மறுத்து வருகின்றனர்.
உடல் நிலை கோளாறால் நான் கடன் வாங்கி நிறைய செலவு செய்துவிட்டேன். எனக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் என்னையும், எனது மகன் ஜெயசீலனையும் கருணை கொலை செய்து விடுங்கள் என மனுவில் கூறியுள்ளேன். சாவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கருணை கொலைக்கு அனுமதி கோரி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தாய்-மகன் மனு கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story