பலத்த மழை: மின்னல் தாக்கி மரம் வெட்டும் தொழிலாளி பலி சிறுவன் உள்பட 8 பேர் காயம்
கீரனூர் அருகே பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் பலியானார். மேலும் சிறுவன் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
கீரனூர்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே உள்ள வைத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் வயது (வயது 40), அதே பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(45), காமராஜ் (30), முனியாண்டி(40), இளஞ்சியம்(45), இவரது மகன் பிரகாஷ் (17) உள்பட 9 பேர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தென்னங்குடியில் உள்ள செல்வமணி என்பவருக்கு சொந்தமான சவுக்கு தோப்பில் தொழிலாளிகள் அனைவரும் நேற்று மாலை மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அப்போது மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சண்முகம் உள்பட 9 பேரும் அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சண்முகம் உள்பட 9 பேர் மீது மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சண்முகம் பரிதாபமாக இறந்தார். மற்ற 8 தொழிலாளர்களும் காயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடையாளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல், உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் காயமடைந்த சிறுவன் பிரகாஷ் உள்பட 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி மரம் வெட்டும் தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story