சீட்டு நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி தனியார் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீட்டு நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தனியார் ஜூவல்லரி-பர்னிச்சர் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே குறிஞ்சி ஜூவல்லரி-பர்னிச்சர் கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் குலுக்கல் முறையில் பரிசு திட்டம் என்கிற பெயரில் சீட்டு நடத்தி வந்தார்.
இதில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த தங்க நகை சேமிப்பு திட்டத்திலும், குலுக்கல் முறையில் பரிசு திட்டத்திலும் சேர்ந்து வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் பணம் கட்டி வந்தனர். இந்த நிலையில் திடீரென்று அந்த கடை கடந்த 1 மாதமாக திறக்கப்படவில்லை.
இதனால் சீட்டு கட்டிய மக்கள் அந்த கடையின் உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் “சுவிட்சு ஆப்“ என்று வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தாங்கள் சீட்டு கட்டிய பணத்தை அதன் உரிமையாளர் மோசடி செய்து விட்டு சென்றதாக நினைத்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை அந்த கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சீட்டு கட்டிய பொதுமக்கள் கடையின் முன்பு கூட ஆரம்பித்தனர். அப்போது கடையில் இருந்த உரிமையாளரிடம் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு கேட்ட னர். ஆனால் அதற்கு அவர் சரிவர பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மாலையில், ஏராளமான பொதுமக்கள் கூடி அந்த கடையையும், உரிமையாளரையும் முற்றுகையிட்டு கட்டிய பணத்தை மோசடி செய்ததாக கூறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடையின் உரிமையாளர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பது தெரியவந்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் சிறப்பு தங்க நகை சேமிப்பு திட்டம் என்கிற பெயரில் மாதந்தோறும் ரூ.300 வீதம் பொதுமக்களிடம் வசூலித்து 12 மாதங்கள் கழித்து அவர்களுக்கு இனிப்பு, காரம் மற்றும் பரிசு பொருட்கள், கட்டிய பணத்தை விட கூடுதலாக பணம் செலுத்தினால் நகைகள் கொடுக்கப்படும் என்றும், குலுக்கல் முறையில் பரிசு திட்டம் என்கிற பெயரில் 1 ஆண்டிற்கு பணம் செலுத்தினால், தவணை காலம் முடியும் போது அவர்களுக்கு பர்னிச்சர் பொருட்கள் கொடுக்கப்படும் என்றும் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
வசூலித்த பணம் லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கடையின் உரிமையாளர் பொதுமக்களிடம் வசூலித்த பணத்திற்கு தங்க நகைகளாகவும், பர்னிச்சர் பொருட்களாகவும் அல்லது பணமாகவும் விரைவில் கொடுத்து விடுவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக மதியம் அந்த கடைக்கு வந்திருந்த பொதுமக்கள் கட்டிய பணத்திற்கு பதிலாக பர்னிச்சர் பொருட்களை வீட்டுக்கு தூக்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story