பக்தர்கள் வசதிக்காக மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவில் செல்லும் படிக்கட்டுகளில் மேற்கூரை அமைப்பு
கோடை காலத்தையொட்டி பக்தர்கள் வசதிக்காக திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவில் செல்லும் படிக்கட்டுகளில் மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது.
திருச்சி,
திருச்சியின் அடையாளமாக மலைக்கோட்டை திகழ்ந்து வருகிறது. திருச்சி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை தான். மலைக்கோட்டை ஆன்மிகம் மற்றும் சுற்றுலாதலமாக விளங்கி வருகிறது.
மலைக்கோட்டையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகர் சன்னதியும், நடுவில் தாயுமானவர் சன்னதியும், மேல் பகுதியில் உச்சிபிள்ளையார் சன்னதியும் உள்ளது. மலைக்கோட்டையை பார்வையிடவும், சாமி தரிசனம் செய்வதற்கும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தினமும் அதிக அளவில் வருகை தருவது உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் வந்து செல்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டையில் உச்சிபிள்ளையார் கோவில் உள்ள மேல் பகுதிக்கு செல்ல 250-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை ஏறி செல்ல வேண்டும். அதுவும் தாயுமானவர் சன்னதியில் இருந்து உச்சிபிள்ளையார் சன்னதிக்கு செல்லும் போது மலையின் மேல் படிக்கட்டுகள் வழியாக நடந்து செல்ல வேண்டும்.
தற்போது கோடை காலமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் படிக்கட்டுகளில் பக்தர்கள் நடந்து செல்லும் போது வெயிலில் கால் சுடுகிறது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை தவிர்ப்பதற்காக மலைக்கோட்டை மேல் பகுதியில் படிக்கட்டுகளில் மேற்கூரை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
இதில் இரும்பு கம்பிகள் நிறுவி அதன்மேல் மேற்கூரை அமைக்கப்படுகிறது. நிழல் தரும் வகையில் அமைக்கப்படும் இந்த மேற்கூரையினால் மழை பெய்தாலும் பக்தர்கள் நனையாமலும் இருக்க முடியும். இந்த மேற்கூரை நிரந்தரமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் வட்டாரத்தில் தெரிவித்தனர். மேற்கூரை வசதி அமைக்கப்படுவதற்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story