கோவையில் ஹெலிகாப்டர் சேவை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
கோவையில் ஹெலிகாப்டர் சேவையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.
துடியலூர்,
கோவை ஜெஸ்பிளை ஏவியேசன் சார்பில் சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டர் தளம் கோவை வட்டமலையாம்பாளையத்தில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில் உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். கோவை நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக இயக்குனரும், செயலாளருமான டாக்டர் பி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ஹெலிகாப்டர் சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, தமிழக அரசு கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம், சாலை விரிவாக்க பணிகள், மேம்பால பணிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு கோவை மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா பயணிகள் செல்ல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும். தொடர்ந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
இந்த விழாவில், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, பொள்ளாச்சி ஜெஸ்பிளை ஏவியேசன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எம்.ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைவரும் ஹெலிகாப்டரில் ஏறி 15 நிமிடங்கள் கோவையை சுற்றி வலம் வந்தனர்.
இதுகுறித்து நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக இயக்குனரும், செயலாளருமான டாக்டர் பி.கிருஷ்ணகுமார் பேசும்போது, கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை மற்றும் சுற்றுலா சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதில் 5 வயது முதல் உள்ள குழந்தைகள் மாணவ-மாணவிகள், பெற்றோர் பயணம் செய்து கோவையை சுற்றி வலம் வரலாம்.
இதில் வருகிற 15-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படுகிறது. இதில் 20 கிலோ மீட்டர் தூரம் வரை ஹெலிகாப்டரில் கோவையை சுற்றிப்பார்க்கலாம், என்றார்.

Related Tags :
Next Story