கேத்தி பாலாடாவில் குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு
கேத்தி பாலாடாவில் குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அதன்படி, ஊட்டி அருகே உள்ள தேவர்சோலை பஜார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கி தரக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தேவர்சோலை பஜார் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால், அங்குள்ள பொதுவான சுடுகாட்டில் புதைத்து வந்து உள்ளோம். தற்போது அந்த இடம் தனியாருக்கு சொந்தமானதாக கூறி, சுடுகாட்டை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வேலி அமைத்து விட்டால் சுடுகாட்டை பயன்படுத்த முடியாமல் போய்விடும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஊட்டி அருகே உள்ள கேத்தி பாலாடா கிராமத்தை சேர்ந்த பெண்கள் குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில், கேத்தி பாலாடா கிராமத்தில் 100 குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு குடிநீர், நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மூலம் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு குழாய்கள் பொருத்தப்பட்டது.
இந்த குழாய்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு உடைந்து விட்டதால், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. ஆகவே, உடைப்பை சரிசெய்து குடிநீர் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் செயலாளர் ஆராக்கியநாதன் மற்றும் நிர்வாகிகள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
காசநோய் துறையில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிபுரிந்து இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு இறப்பு நிவாரண நிதி வழங்க வேண்டும். பணியிட மாறுதல் பெற்ற பணியாளர்களுக்கும், பணிபுரிந்த பணியாளர்களில் பணி, பதவி மாறுதல் செய்து நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கும் அவர்களது பணிக்காலத்தில் வழங்கப்பட்ட ஊதிய ஊக்கத்தொகை வழங்குவதுடன், பணி காலம் சேர்க்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் பணிபுரியும் காசநோய் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நோய் தொற்று மற்றும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மருத்துவ குழு காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு வழங்க வேண்டும். காசநோய் துறையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத கால மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்து முன்னணியின் நீலகிரி மாவட்ட தலைவர் மஞ்சுநாத் தலைமையில் அதன் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ஊட்டி அருகே ஒரு கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் 2 வயது குழந்தையை பாலியல் தொந்தரவு செய்து உள்ளார். குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். கோபாலகிருஷ்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
அந்த குழந்தையின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story