கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 71.93 சதவீதம் பேர் தேர்ச்சி
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 71.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
பெங்களூரு,
கர்நாடக பள்ளி கல்வித்துறை தேர்வு இயக்குனர் சுமங்கலா பெங்களூருவில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் மொத்தம் 2,817 தேர்வு மையங்கள் மூலம் 8.38 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 71.93 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 66.56 சதவீதமும், மாணவிகள் 78.01 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 62.62 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 74.25 ஆகவும் இருந்தது. கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 67.87 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சுமார் 4 சதவீதம் உயர்ந்து உள்ளது. நகர பகுதிகளை சேர்ந்தவர்கள் 69.39 சதவீதம் பேரும், கிராமப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் 74 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
தமிழ் மொழி வழியில் மொத்தம் 171 பேர் தேர்வு எழுதினர். இதில் 85 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது இது 49.71 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி 50 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தமிழ் வழியில் படித்தவர்களின் தேர்ச்சி சிறிது குறைந்துவிட்டது. தேர்ச்சி பெற்றவர்களில் ‘ஏ-பிளஸ்‘ தகுதியை 4.44 சதவீதம் பேரும், ‘ஏ‘ தகுதியை 14.38 சதவீதம் பேரும், ‘பி-பிளஸ்‘ தகுதியை 20.41 சதவீதம் பேரும், ‘பி‘ தகுதியை 21.57 சதவீதம் பேரும், ‘சி-பிளஸ்‘ தகுதியை 14.71 சதவீதம் பேரும், ‘சி‘ தகுதியை 2.60 சதவீதம் பேரும் பெற்றுள்ளனர்.
102 அரசு பள்ளிகளும், 414 அரசு மானியம் பெறும் பள்ளிகளும், 826 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 1,342 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகள் 6, அரசு மானியம் பெறும் பள்ளிகள் 2, தனியார் பள்ளிகள் 35 என மொத்தம் 43 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அதாவது அந்த பள்ளிகள் தேர்ச்சியில் பூஜ்ஜிய சதவீதத்தை பெற்றுள்ளன.
2 பேர் 625-க்கு 625 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தனர். 8 பேர் 624 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், 12 பேர் 623 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றனர். இவ்வாறு சுமங்கலா கூறினார்.

Related Tags :
Next Story