பெங்களூருவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்தது; வாலிபர் சாவு
பெங்களூருவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்து விழுந்து வாலிபர் பலியானார். மேலும் தாய்-மகன் உள்பட 3 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு காடுகோடி அருகே பாபுஜி சர்க்கிளில் காலித்கான் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. அங்கு தரைதளத்தில் 2 கடைகள் உள்ளன. அவற்றில் ஒன்றில் காலித்கான் சைக்கிள் கடை நடத்துகிறார். மற்றொரு கடையில் அப்சர் பாட்ஷா(வயது 22) என்பவர் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பி கொடுத்து வந்தார். அங்கேயே சலீம் பாட்ஷா, பிரதீப் ஆகியோர் வேலை செய்தனர். முதல் மாடியில் ஷாயித் அப்சல், அவரது மனைவி சுல்தானா (24) தம்பதியினர் தங்களது குழந்தை 3 வயதான சையத் ஷாகிலுடன் தங்கி இருந்தார்கள்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் பெரிய கியாஸ் சிலிண்டரில் இருந்து சிறிய சிலிண்டருக்கு கியாஸ் நிரப்பி கொடுக்கும் வேலையில் அப்சர் பாட்ஷா, சலீம் பாட்ஷா ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. சிலிண்டர் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரை மட்டமானது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி அப்சர் பாட்ஷா, சலீம் பாட்ஷா, சுல்தானா, அவரது குழந்தை உயிருக்கு போராடினார்கள்.
இதுபற்றி அறிந்ததும் காடுகோடி போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்சர் பாட்ஷாவை முதலில் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் அங்கு வரவழைக்கப்பட்டார்கள். பின்னர் நேற்றுமுன்தினம் மதியம் இடிபாடுகளுக்குள் இருந்து சலீம் பாட்ஷா, சுல்தானா, குழந்தை சையத் ஷாகில் ஆகியோரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் அங்கிருந்து 50-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்சர் பாட்ஷா சட்டவிரோதமாக வாகனங்களுக்கும், சிறிய சிலிண்டர்களுக்கும் கியாஸ் நிரப்பி கொடுத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிலிண்டர் வெடித்ததில் மற்ற சிலிண்டர்கள் வெடிக்காத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவது தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story