பள்ளிகளில் போக்சோ கமிட்டி அமைக்க நடவடிக்கை
புதுவையில் உள்ள பள்ளிகளில் போஸ்கோ கமிட்டி அமைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் புதுவையில் குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தேவிபிரியா, போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தேவிபிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுவை மாநிலத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்பட்டு உள்ளது. பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் குழந்தைகள் நலக்குழு, போலீசார் இணைத்து வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளில் போக்சோ கமிட்டி அமைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கொண்ட 7 பேர் இருக்க வேண்டும். இந்த கமிட்டி வருகிற ஜூன் மாதம் அனைத்து பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப் படும்.
பள்ளிகள் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறந்து இருக்க வேண்டும். ஆனால் ஒருசில பள்ளிகள் இரவு வரை இயங்குகிறது. இதனால் மாணவ-மாணவிகள் மன அழுத்தம் மட்டுமின்றி உடல் அளவிலும் பாதிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுவையில் உள்ள 60 குழந்தைகள் காப்பகங்களில் அரசு நிதி உதவியுடன் 28 காப்பகங்கள் இயங்குகின்றன. குழந்தைகள் காப்பகத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். காப்பகத்தில் 10-க்கும் குறைவாக குழந்தைகள் இருந்தால் அவற்றை மூட பரிந்துரை செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story