மாகியில் பரபரப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பா.ஜ. பிரமுகர்கள் படுகொலை
மாகி பிராந்தியம் பள்ளூர் பகுதியில் அரசியல் போட்டி காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா பிரமுகர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
புதுவை மாநிலம் மாகி பிராந்தியம் பள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கனிபொழில் பாபு (வயது49). கட்டிட ஒப்பந்ததாரர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகர். முன்னாள் கவுன்சிலரும் ஆவார். நேற்று இரவு வெளியில் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
உடனே அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் பள்ளூர் பகுதியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகரான சம்ஜி (35) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இந்த 2 கொலைகளும் அரசியல் போட்டிகாரணமாக அரங்கேறி இருப்பது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவங்களால் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் மாகி பள்ளூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story