கப்பல்தளத்தில் தீயணைப்புவீரர் பணி


கப்பல்தளத்தில் தீயணைப்புவீரர் பணி
x
தினத்தந்தி 8 May 2018 1:18 PM IST (Updated: 8 May 2018 1:18 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கட்டும் தளம் மும்பையில் செயல்பட்டு வருகிறது.

மும்பை கப்பல்கட்டும் தளத்தில் தீயணைப்புவீரர் (கிரேடு 1, 2 ) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 95 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 48 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 26 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 14 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 7 இடங்களும் உள்ளன. இந்த பணி களுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவர்களும், 25 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 165 செ.மீ. உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 81.5 செ.மீ அளவும், விரிந்த நிலையில் 85 செ.மீ. அளவும் இருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 21-5-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விரிவான விவரங்களை www.bharatseva.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

Next Story