விழுப்புரத்தில் பயிற்சி காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு
விழுப்புரத்தில் பயிற்சி காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார்.
விழுப்புரம்
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 2-ம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், மயிலம், உளுந்தூர்பேட்டை ஆகிய 3 மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதில் 250 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சட்டம்- ஒழுங்கு, நிர்வாகம், காவலர்களின் அடிப்படை பணிகள், காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பு மற்றும் அவர்களது பணிகள், உளவியல் போன்ற பல்வேறு துறை சார்ந்த வகுப்புகள் நடத்தப்பட்டது.
மேலும் காவல் அணிவகுப்பு, நீச்சல், துப்பாக்கி சுடுதல் மற்றும் பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 7 மாத கால பயிற்சி நிறைவடைவதையொட்டி அவர்களுக்கு சட்டம் சார்ந்த எழுத்துத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த எழுத்துத்தேர்வை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டார். அவருடன் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமஜெயம் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த தேர்வு நாளை (வியாழக்கிழமை) முடிவடைகிறது. அதன்பிறகு வருகிற 11, 12-ந்தேதிகளில் கவாத்து தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுகளின் முடிவில் பெறும் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு காவலர்களுக்கான தரவரிசை ஒதுக்கப்படும். வருகிற 30-ந்தேதியுடன் 7 மாத பயிற்சி நிறைவடைகிறது. அதன்பிறகு அவர்களுக்கு வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் ஒரு மாத காலம் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து வெவ்வேறு மாவட்டங்களில் அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story