கருங்கல் அருகே அண்ணன்-தம்பி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு
கருங்கல் அருகே முன்விரோத தகராறில் அண்ணன், தம்பி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
கருங்கல்,
கருங்கல் அருகே பாலப்பள்ளம் ஆனந்தகுட்டிவிளையை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 40). இவருடைய சகோதரர் பால்ராஜ் (36) மற்றும் உறவினர்கள் மணிகண்டன் என்ற ஜோசப் (25), வெள்ளியாவிளையை சேர்ந்த அசோக் (19).
இவர்களுக்கும் கருங்கல் சகாயநகரை சேர்ந்த அஜிஸ்குமார் (22), வெள்ளியாவிளையை சேர்ந்த அஸ்வின் (22), பிரகாஷ் (27), ஸ்டாலின்(30) ஆகிய 4 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மாலையில் அருள்தாஸ் தனது வீட்டின் முன்பு பால்ராஜ், மணிகண்டன், அசோக் ஆகியோருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அஜிஸ்குமார் உள்பட 4 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வந்து அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது ஆத்திர மடைந்த அஜிஸ்குமார் தரப்பினர் அரிவாளால் அருள்தாஸ், பால்ராஜ் உள்ளிட்ட 4 பேரை வெட்டினர். இதில் 4 பேரும் காயம் அடைந்தனர். பிறகு சிகிச்சைக்காக அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து அருள்தாஸ் மற்றும் அஜிஸ்குமார் ஆகிய இருவரும் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story