ஓசூர், உத்தனப்பள்ளி பகுதிகளில் 5 இருசக்கர வாகனங்கள் திருட்டு


ஓசூர், உத்தனப்பள்ளி பகுதிகளில் 5 இருசக்கர வாகனங்கள் திருட்டு
x
தினத்தந்தி 9 May 2018 3:45 AM IST (Updated: 9 May 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர், உத்தனப்பள்ளி பகுதிகளில் 5 இரு சக்கர வாகனங்கள் திருட்டுப்போனது.

ஓசூர்,

ஓசூர் எழில் நகரைச் சேர்ந்தவர் மணி (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவர் தனது மொட்டை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்த போது மொபட்டை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஓசூர் வசந்த் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் (26). தனியார் நிறுவன மேற்பார்வையாளர். இவர் தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. ஓசூர் வசந்த் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). பேக்கரி கடை வைத்துள்ளார். இவர் தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மொபட்டை காணவில்லை. இது தொடர்பாக அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு ஆனேக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராமப்பா (45). சம்பவத்தன்று இவர் மொபட்டில் அகரம் முருகன் கோவிலுக்கு வந்திருந்தார். மொபட்டை நிறுத்தி விட்டு சாமி கும்பிட்டு விட்டு வந்து பார்த்தார். மொபட்டை காணவில்லை.

பெங்களூரு ஆனேக்கல்லைச் சேர்ந்தவர் லோகித் (35). சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் உத்தனப்பள்ளிக்கு வந்திருந்தார். அங்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிளை காணவில்லை.

இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story