ஒடிசா மாநிலத்தில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி நெல்லை வந்தது


ஒடிசா மாநிலத்தில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி நெல்லை வந்தது
x
தினத்தந்தி 10 May 2018 2:45 AM IST (Updated: 10 May 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசா மாநிலத்தில் இருந்து 2 ஆயிரத்து 600 டன் ரேஷன் அரிசி நெல்லை வந்தது.

நெல்லை, 

ஒடிசா மாநிலத்தில் இருந்து 2 ஆயிரத்து 600 டன் ரேஷன் அரிசி நெல்லை வந்தது.

ரேஷன் அரிசி

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ரேஷன் அரிசி வெளிமாநிலங்களில் இருந்து நெல்லைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் லாரி மூலம் அந்தந்த மாவட்ட நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்பிறகு அங்கிருந்து பிரித்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் ரேஷன் அரிசி கொண்டு வரப்படுகிறது. தேவைக்கு ஏற்ப மாதம் இருமுறை வெளிமாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி கொண்டு வரப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தில்...

ஒடிசா மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2 ஆயிரத்து 600 டன் ரேஷன் அரிசி நேற்று முன்தினம் நள்ளிரவில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வந்தது. 42 பெட்டிகளில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த அரிசி மூட்டைகள் நேற்று காலை ரெயில்வே குடோனில் அடுக்கி வைக்கப்பட்டன.

பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு லாரி மூலம் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. நெல்லை நுகர்பொருள் வாணிப கிட்டங்கிக்கு விரைவில் ரேஷன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story