ரெயில்வே ஊழியர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்


ரெயில்வே ஊழியர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 10 May 2018 4:00 AM IST (Updated: 10 May 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வேயை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர்.

திருச்சி,

ரெயில்வேயை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். திருச்சியில் கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இரவிலும் உண்ணாவிரதம் இருந்தனர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதம் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. 

Next Story