கடத்தலுக்காக பதுக்கப்பட்ட 1,400 மணல் மூட்டைகள் பறிமுதல்
பாலப்பட்டி அருகே கடத்தலுக்காக காவிரி ஆற்றில் பதுக்கி வைக்கப்பட்ட 1,400 மணல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் தாலுகா பாலப்பட்டி அருகே உள்ள கூடுதுறை களிமேடு காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணலை மூட்டைகளாக கட்டி விற்பனை செய்து வருவதாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பொதுப்பணித்துறையினர் மற்றும் கனிமவளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் கனிமவளத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கூடுதுறை களிமேடு காவிரி ஆற்றில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது காவிரி ஆற்றில் மணலை கடத்தி விற்பனை செய்வதற்காக மூட்டைகளாக கட்டி அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
பறிமுதல்
உடனே காவிரி ஆற்றில் கட்டி வைக்கப்பட்டிருந்த 1,400-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வினோத்குமார், கனிமவளத்துறை வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். மேலும் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Tags :
Next Story