வீடு புகுந்து 10 பவுன் நகை–பணம் கொள்ளை மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு


வீடு புகுந்து 10 பவுன் நகை–பணம் கொள்ளை மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 May 2018 4:30 AM IST (Updated: 10 May 2018 10:48 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை– பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 52). இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். இவருடைய மனைவி சண்முக வடிவு. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார்கள். மகனுக்கு திருமண முடித்து அருகே உள்ள அம்பலவாண புரத்தில் வசித்து வருகிறார்.

சுப்பிரமணியனின் மகள்களில் ஒருவரான ஜெயராமு, தங்களது குலதெய்வ கோவில் கொடைவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது மகளுடன் குமாரபுரத்தில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். சுப்பிரமணியன் தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளை அருகில் உள்ள தோப்பில் அடைத்து வைத்து இரவு காவல் காப்பது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினமும் சுப்பிரமணியன் ஆடுகளை காவல் காக்க தோப்பிற்கு சென்று விட்டார். வீட்டின் முன் அறையில் சண்முக வடிவு, ஜெயராமு, இவரது மகள் ஆகியோர் படுத்து தூங்கினர்.

அதிகாலை 4.30 மணியளவில் சண்முக வடிவு எழுந்து பார்த்தார். அப்போது, வீட்டின் நடுஅறையில் பீரோ திறந்து கிடந்தது. துணிகளும் சிதறி கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முக வடிவு, மகள் ஜெயராமுவை எழுப்பினார். அவர் எழுந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.6 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிவந்தது.

அதிகாலையில் மர்ம ஆசாமி வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை–பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிவந்தது.

 இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி, ஏட்டு கணேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இதுகுறித்து சண்முக வடிவு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிகாலையில் வீடுபுகுந்து நகை–பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story