விக்கிரவாண்டி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
விக்கிரவாண்டி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணி, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா, போலீஸ்காரர்கள் இளையராஜா, சுரேஷ் ஆகியோர் நேற்று காலை அங்குள்ள அழுக்குப்பாலம் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் வழி மறித்து விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர் களிடம் துருவி, துருவி விசா ரணை நடத்தினர். விசா ரணையில் அவர்கள், விக்கிர வாண்டி அருகே ஒத்தவாடி என்ற கிராமத்தை சேர்ந்த அமீர்அப்பாஸ் (வயது 39), அரசூர் இந்திரா நகரை சேர்ந்த முபாரக் என்கிற ரகமத் (33) ஆகியோர் என்பது தெரிந்தது.
மேலும் விசாரணையில், 2 பேரும் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி வி.சாத்தனூரை சேர்ந்த சேகர் மகன் சுரேஷ் வீட்டிற்குள் புகுந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த அவரது மனைவி கலைமதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்ததும், அதே மாதம் 27-ந் தேதி துறவி கிராமத்தை சேர்ந்த ராஜேந் திரன் மகன் சுரேஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து 17 பவுன் நகையை திருடியதும், இவ்வாறு அந்த பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அமீர் அப்பாஸ், முபாரக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிட மிருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 12 பவுன் நகைகள், 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு செல்போன் மற்றும் இரும்புக் கம்பிகள் ஆகியவற்றை மீட்டனர். பின்னர் இருவரை யும் விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தி சிறையில் அடைத் தனர்.

Related Tags :
Next Story