தொடர் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


தொடர் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 May 2018 5:54 AM GMT (Updated: 11 May 2018 5:54 AM GMT)

தொடர் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் வறண்டு வந்தன. குறிப்பாக, கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளில் தண்ணீர் குறைந்து வந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளிலும், கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் பெய்து வரும் மழையால், கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு வினாடிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று காலை நீர்வரத்து 619 கனஅடியாக அதிகரித்தது.

அணையின் நீர்மட்டம் 40.40 அடியாக உள்ளதால், அணையில் இருந்து 582 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் 2 மாதங்களுக்கு பிறகு தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. தொடர் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story