மாவட்ட செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு + "||" + Drown in the lake The young man dies

தேன்கனிக்கோட்டையில் ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு

தேன்கனிக்கோட்டையில் ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு
தேன்கனிக்கோட்டையில் உள்ள தேவராஜன் ஏரிக்கு ஜாபர்பாஷா என்ற வாலிபர் குளிக்க சென்றார். அப்போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தேன்கனிக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அனீப். இவருடைய மகன் ஜாபர்பாஷா (வயது 23). நேற்று முன்தினம் ஜாபர்பாஷா கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள யாரப் தர்காவிற்கு தொழுகைக்காக வந்தார். இதையொட்டி அவர் நேற்று முன்தினம் இரவு தர்காவிலேயே தங்கினார்.


இந்த நிலையில் நேற்று காலையில் தேன்கனிக்கோட்டையில் உள்ள தேவராஜன் ஏரிக்கு ஜாபர்பாஷா குளிக்க சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. ஜாபர்பாஷாவிற்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதைப் பார்த்து அவருடன் குளிக்க சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஜாபர்பாஷாவை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் முடியவில்லை.

இது குறித்து அவர்கள் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி ஜாபர்பாஷாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜாபர்பாஷா தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சேற்றில் சிக்கியிருந்த அவருடைய உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணலி அருகே ஏரியில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் பலி
மணலி அருகே ஏரியில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
2. விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்: போலீஸ் நிலையத்தில் வாலிபர் சாவு அடித்துக்கொன்றதாக உறவினர்கள் முற்றுகை
விசாரணைக்காக அழைத்துச்சென்ற வாலிபர், போலீஸ் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்தார். அவரை போலீசார் அடித்துக்கொன்றதாக கூறி அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. காஞ்சீபுரம் அருகே: லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
காஞ்சீபுரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4. திண்டிவனத்தில்: ஏரியில் மூழ்கி 4 மாணவர்கள் பலி - நீச்சல் பயிற்சிக்கு சென்றபோது நேர்ந்த பரிதாபம்
திண்டிவனத்தில் நீச்சல் பயிற்சிக்கு சென்றபோது 4 மாணவர்கள் ஏரியில் மூழ்கி பலியானார்கள். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
5. திண்டிவனத்தில்: மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.