கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 12 May 2018 3:56 PM IST (Updated: 12 May 2018 3:56 PM IST)
t-max-icont-min-icon

மதகுபட்டி மற்றும் தேவகோட்டை பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மதகுபட்டி,

மதகுபட்டி அருகே உள்ள வீழனேரி முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் மற்றும் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் வீழனேரி-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 36 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 16 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கொடிமங்கலம் திருமாறன் வண்டியும், 2-வது பரிசை கல்லம்பட்டி சின்னதம்பி , 3-வது பரிசை மேலமடை சீமான்பாண்டியராஜன் வண்டிகள் பெற்றன.

பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 20 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை காரைக்குடி கருப்பணன் வண்டியும், 2-வது பரிசை வல்லாளப்பட்டி குகன், 3-வது பரிசை மாவூர் தேவதாரணி வண்டியும் பெற்றன.

இதேபோல் தேவகோட்டை அருகே மருதவயல் செல்வமுத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மருதவயல்-தேவகோட்டை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 36 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 15 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மருங்கூர் முகமது வண்டியும், 2-வது பரிசை பாகனேரி மதியாபுலிஆகாஸ் மற்றும் மாம்பட்டி பாரிவள்ளல், 3-வது பரிசை நகரம்பட்டி வைத்தியா மாட்டு வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 21 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டு 2 பிரிவாக நடைபெற்றன.

முதல் பிரிவில் முதல் பரிசை கருப்பூர் வீரையா, 2-வது பரிசை நாராயணன்தேவன்பட்டி காட்டு ராஜா , 3-வது பரிசை அய்யம்பாளையம் சவுந்தர்சேகர் ஆகியோரது மாட்டுவண்டிகள் பெற்றன. 2-வது பிரிவில் முதல் பரிசை புள்ளிவயல் காளி , 2-வது பரிசை தேவகோட்டை சரவணன், 3-வது பரிசை பாண்டிகோவில் பாண்டிசுவாமி வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story