மாவட்ட செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கார் வியாபாரிகள் உண்ணாவிரதம் + "||" + Car Merchants fasting urged to set up Cauvery Management Board

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கார் வியாபாரிகள் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கார் வியாபாரிகள் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல சங்கத்தின் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தஞ்சாவூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களின் கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல சங்கத்தின் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர்கள் அறிவழகன்(தஞ்சை), பால மயில்வாகனன்(திருவாரூர்), மகேந்திரன்(நாகை) ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் முகமதுஇக்பால், கவுரவ தலைவர்கள் ரொசலியா, முத்துக்குமார், மாவட்ட செயலாளர் ஜமால்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கார், இருசக்கர வாகனங்களின் வியாபாரிகள், ஆலோசகர்கள் பலர் கலந்து கொண்டனர். 


தொடர்புடைய செய்திகள்

1. தரைக்குடி கண்மாயில் கருவேல மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்
சாயல்குடி அருகே உள்ள தரைக்குடி கண்மாயில் கருவேல மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமரசத்தை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
2. ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினார் : வீட்டில் உண்ணாவிரதம் இருக்கும் ஹர்திக் படேல்
ஹர்திக் படேல் கடந்த மாதம் 25–ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
3. சம்பளம் வழங்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
சம்பளம் வழங்க வலியுறுத்தி கும்பகோணத்தில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
4. விடுமுறை தினத்தில் சம்பளத்துடன் ஓய்வு கேட்டு தேசிய தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
விடுமுறை தினத்தில் சம்பளத்துடன் ஓய்வு கேட்டு தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
5. பிடித்தம் செய்த தொகையை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற மின் ஊழியர் மனைவியுடன் உண்ணாவிரதம்
பிடித்தம் செய்த தொகையை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற மின் ஊழியர் மனைவியுடன் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.