மாவட்ட செய்திகள்

தைல மரங்களை அகற்றக்கோரி குடையை பிடித்தவாறு பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மனு + "||" + The public rally is appealing to the umbrella of the straw

தைல மரங்களை அகற்றக்கோரி குடையை பிடித்தவாறு பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மனு

தைல மரங்களை அகற்றக்கோரி குடையை பிடித்தவாறு பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மனு
தைலமரங்களை அகற்றக்கோரி குடையை பிடித்தவாறு பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஒரு வறட்சி மாவட்டம் ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக பருவமழையானது சராசரி மழையளவை விட குறைந்து கொண்டு வருகிறது. இதேபோல கடந்த ஆண்டும் பருவமழை சராசரி அளவைவிட மிகவும் குறைவாக பெய்தது. இதனால் தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பல இடங்களில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது.


இதனால் வீடுகளில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டமாக மாறி வருவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள தைலமரங்கள் தான் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைலமரங்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து “பொறந்த ஊருக்கு புகழ் சேரு” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

இந்த அமைப்பின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைலமரங்களை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். மனு கொடுக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் இருந்து குடைகளை பிடித்துக்கொண்டு ஊர்வலமாக கலெக்டர் அலுவலக பகுதி வரை சென்றனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் புதுக்கோட்டை மாவட்டம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியது என்பதற்கு நமது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் போன்றவை சாட்சியாகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் வறட்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது வனப்பகுதிகளில் உள்ள தைலமரங்கள் தான். இவற்றால் நமது மாவட்டத்தின் மழையளவு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாவட்டத்தின் வனப்பகுதிகளில் உள்ள தைலமரங்களை அகற்றி விட்டு, பலன் தரும் பழவகை மரக்கன்றுகளை நட வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி, மழைநீரை முறையாக சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. காணும் பொங்கலையொட்டி 2–வது நாளாக அறிவியல் மையத்தில் குவிந்த பொதுமக்கள்
பொங்கல் திருவிழா கடந்த 15–ந் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கலுக்கு மறுநாள், மாட்டு பொங்கல், கரிநாள் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம்.
2. இலங்கை கடற்படை அத்துமீறிய தாக்குதலில் பலியான ராமேசுவரம் மீனவர் உடலை யாழ்ப்பாணத்தில் இருந்து மீட்க வேண்டும் மீன்வளத்துறை அதிகாரியிடம், மகள் மனு
இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய தாக்குதலால் பலியான மீனவரின் உடலை யாழ்ப்பாணத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று அவருடைய மகள், மீன்வளத்துறை அதிகாரியிடம் மனு அளித்தார்.
3. காரமடையில் மேம்பாலம் கட்டியும் போக்குவரத்து நெரிசல் தீரவில்லை சேவை சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காரமடையில் மேம்பாலம் கட்டியும் பயனில்லாததால், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதை தொடர்ந்து சேவை சாலை அமைத்து வாகன நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
4. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள புதுவை நேரு வீதியில் கழிவுநீர் குப்பைகளால் போக்குவரத்து நெரிசல்
புதுவையின் முக்கிய கடைவீதியான நேரு வீதியில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்பட்டு மண் உள்ளிட்ட குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளது.
5. சத்தியமங்கலம் அருகே ராஜன் நகரில் அடிக்கடி நடமாடும் சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகரில் அடிக்கடி சிறுத்தை நடமாடுவதால் அதை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.