மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்க் காசாளரிடம் ரூ.3½ லட்சம் வழிப்பறி மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு + "||" + Petrol punk cashier Rs 3½ lakh The police are searching for mysterious people

பெட்ரோல் பங்க் காசாளரிடம் ரூ.3½ லட்சம் வழிப்பறி மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

பெட்ரோல் பங்க் காசாளரிடம் ரூ.3½ லட்சம் வழிப்பறி மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
அரவக்குறிச்சி அருகே பெட்ரோல் பங்க் காசாளரிடம் ரூ.3½ லட்சத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரவக்குறிச்சி,

கரூர் வேலுசாமிபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 68). இவர், அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் பெட்ரோல் பங்க்கில் வரவு-செலவு கணக்கு பார்த்து விட்டு ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 100-ஐ ஒரு பையில் வைத்து கொண்டு கரூரில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் கொடுப்பதற்காக புறப்பட்டார். அப்போது கரூர் செல்வதற்காக மலைக்கோவிலூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக சுப்பிரமணி காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென சுப்பிரமணியின் பண பையினை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி அவர்களை பிடிக்க முயன்ற போது, அதில் ஒருவரின் செல்போன் கீழே விழுந்தது. எனினும் அந்த 2 பேரும் பணப்பையுடன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.


மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணி புகார் கொடுத்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு அரவக் குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழிப்பறி கொள்ளையன் தவறவிட்ட செல்போனை கைப்பற்றினர். அதை வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த 2 பேரையும் பிடிக்க போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர். விசாரணையின் போது, வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களில் ஒருவன் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. திருவெறும்பூர் அருகே பயங்கரம் மதுபாட்டிலால் கழுத்தை அறுத்து கொத்தனார் கொலை போலீசார் விசாரணை
திருவெறும்பூர் அருகே மதுபாட்டிலால் கழுத்தை அறுத்து கொத்தனார் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம்: காதலனுடன் சேர்ந்து கணவரை உருட்டுக்கட்டையால் தாக்கிய பெண் போலீசார் வலைவீச்சு
கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த பெண், காதலனுடன் சேர்ந்து கணவரை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. பேராவூரணி அருகே அழுகிய நிலையில் பெண் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
பேராவூரணி அருகே அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார்.இவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
தென்தாமரைகுளம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. தஞ்சையில் விஷம் குடித்து தனியார் பஸ் ஊழியர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
தஞ்சையில் தனியார் பஸ் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.