மாவட்ட செய்திகள்

ரூ.4 கோடியில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்கள் + "||" + Newly laid out traces of Rs 4 crores

ரூ.4 கோடியில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்கள்

ரூ.4 கோடியில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்கள்
திருமானூர் அருகே ரூ.4 கோடியில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்களை மீண்டும் புதிதாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே அரியலூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து முடிகொண்டானுக்கும் வடக்கே ஏலாக்குறிச்சி பிரிவு சாலை செல்கிறது. இந்த சாலை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானதாகும். ஏலாக்குறிச்சி செல்லும் இந்த சாலை கடந்த மாதம் சுமார் 4 கோடி மதிப்பீட்டில் 3½ கி.மீட்டர் தூரம் புதிய தார்ச்சாலை போடப்பட்டது. மேலும், புதிதாக போடப்பட்ட இந்த தார்ச்சாலை 1 கி.மீட்டருக்கு ஒரு ஒப்பந்ததாரரும், 2½ கி.மீட்டருக்கு வேறு ஒரு ஒப்பந்ததாரரும் போட்டனர்.

இந்த தார்ச்சாலையை ஏற்கனவே இருந்த குழிகள் பெரும் பள்ளங்கள் தார் ஜல்லி கலவை கொண்டு மூடப்படாமல்,ஜல்லி கொண்டு மூடப்பட்டு மேலே புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது. நெடுஞ் சாலைதுறையின் உதவி கோட்ட பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர், சாலை ஆய்வாளர்களின் மேற்பார்வையில், இது தொடர்பாக இந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, இது ஒன்றும் பிரச்சினையில்லை. இப்படித்தான் போடமுடியும். நெடுஞ்சாலைத்துறையின் பணிகள் எப்போதும் நன்றாகவே இருக்கும் என சாதாரணமாக பதிலளித்தனர்.

சீரமைக்க வேண்டும்

இந்த மேற்பார்வை யாருக்காக மேற்கொள்ளப்பட்டது என தெரியவில்லை. இவ்வாறு போடப்பட்ட இந்த தார்ச்சாலை ஒரு மாதத்திற்குள்ளாகவே பல இடங்களில் சேதமடைந்து தார்ச்சாலை ஒரு மாதத்திற்குள்ளாகவே பல இடங்களில் சேதமடைந்து தார்கலவை ஜல்லிகள் வெறும் ஜல்லிகளாக வெளியே வந்துள்ளது. மேலும், இப்படி மோசமாக போடப்பட்ட இந்த சாலையில் மேலும் இன்னொரு முறை போட வேண்டிய சிப்ஸ் ஜல்லி இன்னும் போடவில்லை. மேலும் சாலையோரங்களில் களிமண் இல்லாத மண் 1 மீட்டர் அகலத்துக்கு அமுக்க வேண்டும். ஆனால் அது நடைபெறாமல் சாலையின் ஓரங்களிலிருந்து வெட்டி போடப்பட்ட மண் தான் கிடக்கிறது.

இவ்வாறு மோசமான நிலையில் போடப்பட்ட இந்த தார்ச்சாலை போடப்பட்டு ஒரு மாதத்தில் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. சாலை பணியும் கடந்த ஒரு மாதமாக முழுமைபெறாமல் உள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் புதிதாக போடப்பட்ட சாலை மீண்டும் பழைய சாலைக்கே திரும்பு ம் சூழல் ஏற்படும் என பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். எனவே சேத மடைந்த இந்த தார்ச் சாலையை மீண்டும் புதிதாக சீரமைக்க வேண்டும் இல்லையெனில் பல கட்ட போராட்டங்களை சந்திக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.