மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 May 2018 10:45 PM GMT (Updated: 13 May 2018 8:44 PM GMT)

மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்கக்கோரி கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கும்பகோணம்,

மயிலாடுதுறை -திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். குத்தாலம் அருகே நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கும்பகோணம் ரெயில் நிலையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை பகல் நேரத்தில் 2 முறை இயக்க வேண்டும்.

இந்த ரெயிலில் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும். ரெயில்வே கால அட்டவணையில் அறிவித்தபடி தாம்பரம்-நெல்லை, தாம்பரம்-செங்கோட்டை அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் ரெயில் நிலையம் முன்பு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர குழு உறுப்பினர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், நகர செயலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

Next Story