வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக ஓய்வு பெற்ற மாநகராட்சி அதிகாரி, மனைவி மீது வழக்கு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஓய்வு பெற்ற மாநகராட்சி அதிகாரி மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை,
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஓய்வு பெற்ற மாநகராட்சி அதிகாரி மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சொத்து குவிப்பு
மும்பை மாநகராட்சியில் கடந்த 1976-ம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை சிவில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கேசவ் சங்காரம் (வயது64). இவர் மீது சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் ஒன்று வந்தது.
அந்த புகாரில் கேசவ் சங்காரம் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூறப்பட்டு இருந்தது.
வழக்குப்பதிவு
இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கேசவ் சங்காரம் தனது வருமானத்தை விட அதிகமாக ரூ.38 லட்சத்து 94 ஆயிரத்திற்கு சொத்து குவித்து இருந்தது தெரியவந்தது. இந்த தொகை அவரது வருமானத்தை விட 41.15 சதவீதம் அதிகம் ஆகும்.
எனவே லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஓய்வு பெற்ற மாநகராட்சி அதிகாரி கேசவ் சங்காரம் மற்றும் அவரது மனைவி சுனிதா (60) மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story