கர்நாடகா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி: பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து திருச்செந்தூர், கோவில்பட்டி, எட்டயபுரத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
கோவில்பட்டி,
கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து திருச்செந்தூர், கோவில்பட்டி, எட்டயபுரத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
கோவில்பட்டிகோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு, கர்நாடகா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றிபெற்றதையடுத்து, அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு நகர பா.ஜ.க. தலைவர் வேல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாராயணன், நகர பொதுச்செயலாளர்கள் தினேஷ்குமார், முனியராஜ், நகர பொறுப்பாளர் மாரிமுத்து, விவசாய அணி ராமகிருஷ்ணன், சென்னகேசவன் வெங்கடேஷ், வணிகர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ்குமார், சட்டமன்ற பொறுப்பாளர் பாலு, லட்சுமணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம்அதே போல் எட்டயபுரம் மெயின் பஜாரில் உள்ள பட்டத்து விநாயகர் கோவில் முன்பு நகர பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு, வணிகப்பிரிவு தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துவேல், ஒன்றிய தலைவர் ராம்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் நாகராஜன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி அமைப்பாளர் மைதீன்துரை, ஆத்திராஜ், செல்வராஜ், ராமநாதன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்திருச்செந்தூர் பஸ் நிலையம், இரும்பு ஆர்ச், கீழரதவீதி ஆகிய இடங்களில் பா.ஜ.க. சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது. இதில் அக்கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், நகர தலைவர் சரவணன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், நகர செயலாளர் கிருஷ்ணன், இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் முத்துராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.