மாவட்ட செய்திகள்

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அம்பேத்கர் நகர் பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Ambedkar Nagar Public road blockade for drinking water supply

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அம்பேத்கர் நகர் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அம்பேத்கர் நகர் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அம்பேத்கர் நகர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தில் அம்பேத்கர் நகர் உள்ளது. இந்த நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு அந்த பகுதியில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வினி யோகம் செய்து வந்தனர். இந்நிலையில், அம்பேத்கர் நகர் பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் குழாய் உடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. அம்பேத்கர் நகர் பொதுமக்கள் இதுகுறித்து ஊராட்சி நிர் வாகத்திடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இது நாள் வரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலையில் பெரம்பலூர்-துறையூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறி குடிநீர் கொண்டு செல்லும் குழாய் சரி செய்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பெரம்பலூர்-துறையூர் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.