மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்; வாலிபர் கைது + "||" + Sandy tractor seized without permission Young man arrested

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்; வாலிபர் கைது

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்; வாலிபர் கைது
நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நீடாமங்கலம்,

நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நீடாமங்கலம் கோரையாற்றில் ஒரு டிராக்டரில் 2 பேர் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இதை பார்த்து போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை கண்டு அவர்கள் 2 பேரும் தப்பியோடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் தப்பியோடி விட்டார்.


பிடிப்பட்டவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 22) என்பதும், தப்பியோடியவர் அதை பகுதியை சேர்ந்த புகழேந்திரன் என்பதும், இவர்கள் அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் கைது

இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய புகழேந்திரனை வலைவீசி தேடிவருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தானேயில் ரூ.3 லட்சத்துக்காக கடத்தப்பட்ட வக்கீல் மகன் மீட்பு
ரூ.3 லட்சத்துக்காக கடத்தப்பட்ட வக்கீல் மகனை போலீசார் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக டி.வி. மெக்கானிக் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. மாடியில் இருந்து தவறிவிழுந்து இறந்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது அம்பலம் மனைவி, மகள் கள்ளக்காதலர்களுடன் கைது
மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது அம்பலம் ஆகி உள்ள நிலையில் இதுதொடர்பாக மனைவி மற்றும் மகளுடன் கள்ளக்காதலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள
4. ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் கைது
ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் போலீசில் சிக்கி உள்ளார். இவர் இந்தி நடிகையை ஏமாற்றி கற்பழித்து பணமோசடி செய்ததும்தெரியவந்தது.
5. தூத்துக்குடி அருகே பரபரப்பு: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் திடீர் கைது விடுவிக்கக்கோரி கிராமமக்கள் சாலைமறியல்
தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் திடீரென கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.