மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் பேரனுடன் சென்ற அ.தி.மு.க.பிரமுகரை தாக்கி ரூ.1.75 லட்சம் வழிப்பறி + "||" + Rs.1.75 lakh stampede hit by AIADMK in Tiruvannamalai

திருவண்ணாமலையில் பேரனுடன் சென்ற அ.தி.மு.க.பிரமுகரை தாக்கி ரூ.1.75 லட்சம் வழிப்பறி

திருவண்ணாமலையில் பேரனுடன் சென்ற அ.தி.மு.க.பிரமுகரை தாக்கி ரூ.1.75 லட்சம் வழிப்பறி
அ.தி.மு.க.பிரமுகரை தாக்கி ரூ.1.75 லட்சம் வழிப்பறி செய்து மோட்டார்சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் குட்டி அருணாசலம். அ.தி.மு.க.பிரமுகரான இவர் திருவண்ணாமலையில் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு சுமார் 10 மணியளவில் இவர் தனது நிறுவனத்தை பூட்டி விட்டு, ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துடன் மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிளை அவரது பேரன் ஓட்டி வந்ததாக தெரிகிறது. தென்றல் நகர் பகுதிக்கு வந்தபோது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் குட்டி அருணாசலத்தையும், அவரது பேரனையும் தாக்கி விட்டு ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இது குறித்து குட்டி அருணாசலம் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். தினமும் இவர் பணத்துடன் செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு வந்து பறித்துச்சென்றனரா? அல்லது இதில் மர்மம் ஏதும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று இரவு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.