மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய மருத்துவ அதிகாரி கைது + "||" + Medical Officer arrested for bribery

லஞ்சம் வாங்கிய மருத்துவ அதிகாரி கைது

லஞ்சம் வாங்கிய மருத்துவ அதிகாரி கைது
வாஷி மாநகராட்சி ஆஸ்பத்திரியில் லஞ்சம் வாங்கிய மருத்துவ அதிகாரி கைது செய்யப்பட்டார்.
மும்பை,

நவிமும்பை, வாஷி மாநகராட்சி ஆஸ்பத்திரியில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருபவர் சச்சின் வாக்மரே. இவரிடம் விபத்தில் சிக்கிய ஒருவரின் அண்ணன் விபத்து காப்பீடு தொடர்பான ஆவணம் ஒன்றில் கையெழுத்து வாங்க வந்தார்.


அப்போது மருத்துவ அதிகாரி அவரிடம் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து அவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். பின்னர் அவர் லஞ்ச ஒழிப்பு துறையினர் அளித்த யோசனையின்படி மருத்துவ அதிகாரியை சந்தித்து ரூ.4 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் மருத்துவ அதிகாரி சச்சின் வாக்மரேயை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.