மாவட்ட செய்திகள்

அடி, தடியில் ஈடுபட்ட தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் கைது + "||" + Five persons, including father and sons, were arrested on fight

அடி, தடியில் ஈடுபட்ட தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் கைது

அடி, தடியில் ஈடுபட்ட தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் கைது
அடி, தடியில் ஈடுபட்ட தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,

மும்பை மான்கூர்டை சேர்ந்தவர் சஞ்சய் சசானே (வயது46). இவரது மகன்கள் பிரதீப் (21), ரமேஷ் (19). இந்தநிலையில் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தனது வீட்டருகில் சென்று கொண்டிருந்த ரமேஷ் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த மெபூஸ்கான், முஸ்தபா சேக் ஆகிய இரண்டு பேர் மீது இடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த இருவரும் ரமேசை சத்தம் போட்டு உள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் உண்டானது.இதனால் அவரது சத்தம் கேட்டு சஞ்சய் சசானே, பிரதீப் இருவரும் ஓடி வந்து அடி, தடியில் ஈடுபட்டனர். இந்த மோதலில் மெபூஸ்கான், முஸ்தபா சேக், பிரதீப் ஆகிய மூன்று பேர் காயம் அடைந்தனர்.


சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதலில் தொடர்புடைய தந்தை, மகன்கள் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தானேயில் ரூ.3 லட்சத்துக்காக கடத்தப்பட்ட வக்கீல் மகன் மீட்பு
ரூ.3 லட்சத்துக்காக கடத்தப்பட்ட வக்கீல் மகனை போலீசார் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக டி.வி. மெக்கானிக் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. மாடியில் இருந்து தவறிவிழுந்து இறந்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது அம்பலம் மனைவி, மகள் கள்ளக்காதலர்களுடன் கைது
மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது அம்பலம் ஆகி உள்ள நிலையில் இதுதொடர்பாக மனைவி மற்றும் மகளுடன் கள்ளக்காதலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள
4. ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் கைது
ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் போலீசில் சிக்கி உள்ளார். இவர் இந்தி நடிகையை ஏமாற்றி கற்பழித்து பணமோசடி செய்ததும்தெரியவந்தது.
5. தூத்துக்குடி அருகே பரபரப்பு: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் திடீர் கைது விடுவிக்கக்கோரி கிராமமக்கள் சாலைமறியல்
தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் திடீரென கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.