மாவட்ட செய்திகள்

மாநிலம் முழுவதும் 36 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப முதல்-மந்திரி உத்தரவு + "||" + The chief ministerial order to fill 36 thousand government jobs across the state

மாநிலம் முழுவதும் 36 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப முதல்-மந்திரி உத்தரவு

மாநிலம் முழுவதும் 36 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப முதல்-மந்திரி உத்தரவு
மாநிலம் முழுவதும் 36 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
மும்பை,

மராட்டிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மாநிலத்தில் உள்ள 76 ஆயிரம் காலிப்பணியிடங்கள் 2 கட்டங்களாக நிரப்பப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். குறிப்பாக விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் கூறினார்.


இந்தநிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்பின் படி முதல் கட்டமாக 36 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான அரசின் நலத்திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு 36 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.

இதன்படி கிராமப்புற மேம்பாட்டு துறையில் 11 ஆயிரம் பணியிடங்கள், சுகாதார துறையை சேர்ந்த 10 ஆயிரத்து 568 பணியிடங்கள், விவசாயத்துறையை சேர்ந்த 2 ஆயிரது 572 பணியிடங்கள் உள்பட பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.