ஓட்டப்பிடாரம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 4¼ பவுன் நகை, பணம் திருட்டு
ஓட்டப்பிடாரம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 4¼ பவுன் தங்க நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 4¼ பவுன் தங்க நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கட்டிட தொழிலாளிஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாநத்தம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி உஷாராணி(வயது 27). இவர்கள் கடந்த 15–ந் தேதி இரவு வழக்கம் போல் வீட்டின் படுக்கை அறையில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம ஆசாமி வீட்டுக்குள் நுழைந்து உள்ளார்.
நகை–பணம் திருட்டுஇதனால் மர்ம ஆசாமி அந்த அறைக்கு செல்லும் கதவை நைசாக பூட்டி உள்ளார். பின்னர் அருகில் இருந்த அறையில் உள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்த 4¼ பவுன் தங்கநகைகள், வெள்ளிக் கொலுசு, ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை திருடிக் கொண்டு மர்ம ஆசாமி தப்பி சென்று விட்டார்.
மறுநாள் காலையில் உஷாராணி படுக்கை அறையில் இருந்து அருகில் பீரோ இருந்த அறைக்கு செல்லும் கதவு பூட்டப்பட்டு இருப்பதால் அதிர்ச்சி அடைந்தார். அவர் முன்பக்க கதவு வழியாக வெளியில் வந்தார். பின்பகுதியில் சென்று பார்த்த போது அங்கு உள்ள கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த பொருட்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் புதியம்புத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாதவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.