ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி முத்ரா கடன் கேட்டு ஆயிரக்கணக்கானோர் மனு


ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி முத்ரா கடன் கேட்டு ஆயிரக்கணக்கானோர் மனு
x
தினத்தந்தி 18 May 2018 3:45 AM IST (Updated: 18 May 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் நடை பெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி யின் போது முத்ரா கடன் கேட்டு ஆயிரக்கணக்கானோர் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வருவாய் கிராமங்களுக்கான தீர்வாய கணக்கு தணிக்கை எனப்படும் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது.

இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி யின்போது அந்தந்த உள் வட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்க ளின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தால் அந் தந்த துறைகளுக்கு பரிந்துரை செய்து தீர்வு காண நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகி றது.

இதன்படி ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் நடை பெற்று வரும் ஜமாபந்தியை யொட்டி அந்தந்த உள் வட்ட கிராமங்களில் உள்ள பொது மக்களுக்கு அறிவிப்பு செய்யப் பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஜமாபந்தி நடை பெறும் நாட்களில் நாள்தோ றும் அந்தந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திரண்டு வந்து மனு அளித்த னர்.

இவ்வாறு நேற்று ராமநாத புரம் தாலுகா அலுவலகத்தில் மண்டபம் பகுதியை சேர்ந்த 8 கிராமங்களுக்கு ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஜமாபந்தியின்போது மேற் கண்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனு அளித்தனர். குறிப்பாக முத்ரா கடன் வழங்க கோரி ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து மனு அளித்தனர். மிக அதிக அளவில் மக்கள் திரண்டு வந்து முத்ரா கடன் கோரி மனு அளித்ததால் தாலுகா அலுவலக பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தாசில்தார் சிவக்குமார் கூறியதாவது:- ஜமாபந்தியில் அளிக்கப்படும் மனுக்களை கணினியில் பதிவு செய்து அதற்குரிய எண் வழங்கி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது அதிகளவில் முத்ரா கடன் கேட்டு ஏராளமானோர் மனு அளித்துள்ளனர். கடந்த 3 நாட் களில் நடைபெற்ற ஜமாபந் தியில் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் முத்ரா கடன் கேட்டுதான் அதிக மனு அளித்துள்ளனர். இந்த மனுக் களை சம்பந்தப்பட்ட வங் கிகளுக்கு அனுப்பி உரிய ஆய்வு செய்து கடன் வழங்க பரிந்துரை செய்யப்படும். இவ் வாறு கூறினார்.

Next Story