மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு போலீசார் வலைவீச்சு + "||" + Police looted liquor for Rs 4 lakh in the shop

டாஸ்மாக் கடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு போலீசார் வலைவீச்சு

டாஸ்மாக் கடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு போலீசார் வலைவீச்சு
திருமானூர் அருகே டாஸ்மாக் கடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே இலந்தைகூடம்-அரண்மனைக்குறிச்சி சாலையில் வயல் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்து விட்டு விற்பனையாளர் அன்பழகன் மற்றும் மேற்பார்வையாளர் வெங்கடாசலம் ஆகியோர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர்.


இந்நிலையில் நேற்று காலையில் டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திருமானூர் போலீசாருக்கும், விற்பனையாளருக்கும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார், துணை போலீஸ் சூப்பிரண்டு சிவமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்பட்டது. மோப்ப நாய் சுமார் 200 மீட்டர் தூரம் கிழக்கு நோக்கி சென்று யாரையும் கவ்வி பிடிக்காமல் நின்று விட்டது.

டாஸ்மாக் கடையில் 48 குவாட்டர் மது பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது. தொடர்ந்து டாஸ்மாக் கடை மாவட்ட மேலாளர் ராஜேந்திரன் கடையை ஆய்வு செய்தார். இதுகுறித்து திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி வழக்குப் பதிவு செய்து டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. தனியார் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2. கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
சுவாமிமலை அருகே குடும்ப தகராறில் கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. குளத்தில் குளித்துகொண்டிருந்த பெண்ணிடம் 5¾ பவுன் நகை பறிப்பு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
இரணியல் அருகே குளத்தில் குளித்து கொண்டிருந்த பெண்ணிடம் 5¾ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
4. பர்னிச்சர் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
அழகியபாண்டியபுரம் அருகே பர்னிச்சர் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
5. துறையூர் அருகே கொத்தனார் கழுத்தை நெரித்து கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
துறையூர் அருகே கொத்தனாரை கழுத்தை நெரித்து கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.