மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Drinking water board employees demonstrate various demands

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க தலைவர் ஆசைதம்பி தலைமை தாங்கினார். சங்கத்தை சேர்ந்த ஆனந்தகண்ணன், மனோகரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட செயலாளர் சீனிமணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு ஷெட்யூல் ஆப் ரேட் படி ஊதியம் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., இ.பி.எப். கணக்கு விவர பட்டியல்களை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற, மரணமடைந்த ஊழியர்களுக்குரிய பண பயன்களை உடனே வழங்க வேண்டும்.

குடிநீர் வினியோகம்

13.12.2017 பேச்சுவார்த்தையின் பலன்களை உடனே அமல்படுத்த வேண்டும். பழுதான மோட்டார்களை உடனே சரி செய்து, குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் அறிவொளி நன்றி கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. அந்தியூரில் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அந்தியூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
2. நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஓசூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
ஓசூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. மத்தியில் மோடி ஆட்சியையும் மாநிலத்தில் பேடி ஆட்சியையும் அகற்ற வேண்டும் -மு.க.ஸ்டாலின்
மத்தியில் மோடி ஆட்சியையும், மாநிலத்தில் பேடி ஆட்சியையும் அகற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார். #MKStalin #DMK
5. மத்திய அரசின் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்
மத்திய அரசின் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஊர்வலம் நடத்தினர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.