தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட முடிவு கலெக்டரிடம் மனுவும் அளித்தனர்


தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட முடிவு கலெக்டரிடம் மனுவும் அளித்தனர்
x
தினத்தந்தி 17 May 2018 10:45 PM GMT (Updated: 17 May 2018 9:48 PM GMT)

கூட்டுறவு கடன் சங்கம் தொய்வின்றி நடை பெறும் வரை தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட முடிவு செய்துள்ளனர். இது குறித்து கலெக்டரிடம் மனுவும் அளித்தனர்.

திருவாரூர்,

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க தலைவர் வெங்கடேசன், கவுரவ தலைவர் மலர்வேந்தன், பொதுச்செயலாளர் கேசவன் ஆகியோர் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆகியோரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் நிர்வாகம் தேர்தல் நடவடிக்கைகளால் முடங்கி உள்ளது. இதனால் கன அளவில் சங்கத்தின் பணியாளர்கள் சந்தித்து வரும் பல்வேறு இன்னல்கள் குறித்தும், பொதுமக்கள் மற்றும் சங்கத்தின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நிர்வாகம் தொய்வின்றி நடைபெற எவ்வித தீர்வும் காணப்படவில்லை. எனவே கூட்டுறவு நிர்வாகம் தொய்வின்றி நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒட்டு மொத்த விடுப்பில் செல்ல முடிவு

கூட்டுறவு கடன் சங்கம் தொய்வின்றி நடைபெறும் வரை சங்க பணியாளர்கள் அனைவரும் வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story